Tuesday, November 2, 2010

மனதில்



என்னை
உனக்கானவளாய்
நினைக்க சொல்கிறது
என் மனம் .
ஆனால்
இங்கு மனமா மணத்தை
தீர்மானிக்கிறது.
சாதியும் மதமும் தானே !
சாதிகள் இல்லையடி பாப்பா !
பாரதி சொன்னது தான் .
அரிச்சுவடி வயதில் அழகாய் பதிந்த வரி
சமூகத்தை அறியும் வயதில்
கேலிச்சிரிப்பாய் தோன்றுகிறது!
என் நோக்கம்
சமுதாய சீர்திருத்தமல்ல
சமூகத்தில் சிறுதிருத்தமாய்
நம் திருமணம் !



            

No comments:

Post a Comment