புத்தர் போதித்த அமைதியும்
யுத்தத்தில் இறந்தது போலும்!
ஆம் !
இயற்கை சூழ்ந்த இலங்கையை
இன்று இனவெறி சூழ்ந்தது
மணற் பரப்பெங்கும் மனித உடல்கள்,
சொந்த நாட்டிலேயே சொந்தங்கள் இழந்து
சொத்துக்களற்று சோற்றுக்கு வழியின்றி
சோகம் சூழ அகதிகளாய்
முள்வேலி சூழப்பட்டு மிருகங்களாய் தமிழர்கள்
வானவேடிகைக்கு ஆர்பரிக்கும் வயதில்
வெடிச்சத்ததிற்கு அலறி துடிக்கும் குழந்தைகள்
ஏன்?எதற்கு?யாரால் இத்தனை கொடுமை?
கேள்விகள் கேட்க நேரமில்லை,
பதில் சொல்ல யாருமில்லை.
வருங்கால உலகின் வசந்தம் குழந்தைகள் கையிலாம் !
இக்குழந்தைகளின் நிகழ்கால வாழ்க்கை எங்கே?
பசியென்றும் அழ திரணியற்ற
பாவப்பட்ட உடல்கள் !
பள்ளிக்கூடங்கள் எங்கும் பதுங்குகுழிகளாய்
கல்வியென்றும் கானல் நீராய் இவர்களுக்கு
"ஓடி விளையாடு பாப்பா" பாரதியின் வரிகள் மரண
ஓழங்களால் சூழப்பட்ட அவர்களுக்கு பொருந்துமா?
ஆகாயந்தொடும் கனவுகள் கொண்ட நம் குழந்தைகளிடையே
அன்றாட வாழ்க்கையே கனவாகி போன இவர்கள் எங்கே?
செங்குருதி சிந்த, சிறகொடிந்த பறவைகளாய் இவர்தம் பெற்றோர்
சிறகுகள் முளையா இக்குஞ்சுகளை காப்பது எவ்வாறு?
நீலக்கடலை இரத்தம் நிரம்பி செம்மையாக மாற்றும் முன்
ஒரு நொடி சிந்திப்போம் !
இக்குழந்தைகளின் வாழ்வில் விடியலுக்காக !